உடலில் உறுதி உடையவரே
உலகில் இன்பம் உடையவராம்;
இடமும் பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ?
சுத்த முள்ள இடமெங்கும்
சுகமும் உண்டு நீயதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்,
நீண்ட ஆயுள் பெறுவாயே!
காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கு வருவோரின்
காலைத்தொட்டுத் கும்பிட்டுக்
காலன் ஓடி போவானே!
கூழை யேநீ குடித்தாலும்
குளித்த பிறகு குடியப்பா!
ஏழை யேநீ ஆனாலும்
இரவில் நன்றாய் உறங்கப்பா!
தூய காற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்த பின்உணவும்
நோயை ஓட்டி விடும்பபா
நூறு வயது தருமப்பா!
-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
உலகில் இன்பம் உடையவராம்;
இடமும் பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ?
சுத்த முள்ள இடமெங்கும்
சுகமும் உண்டு நீயதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்,
நீண்ட ஆயுள் பெறுவாயே!
காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கு வருவோரின்
காலைத்தொட்டுத் கும்பிட்டுக்
காலன் ஓடி போவானே!
கூழை யேநீ குடித்தாலும்
குளித்த பிறகு குடியப்பா!
ஏழை யேநீ ஆனாலும்
இரவில் நன்றாய் உறங்கப்பா!
தூய காற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்த பின்உணவும்
நோயை ஓட்டி விடும்பபா
நூறு வயது தருமப்பா!
-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
நண்பரே.. முதல் வருகை
ReplyDeleteதங்கள் தளத்தினை இனி நானும் பின்தொடர்கிறேன்
ஒவ்வொரு பாடல்களும் மிக அருமை
நட்புடன்
சம்பத்குமார்
www.tamilparents.com
கருத்து உண்மை தான். இனிய நத்தார் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_13.html