இரண்டு கால்கள் எதற்காக?
என்றும் விரைவாய் நடப்பதற்கு!
இரண்டு கைகள் எதற்காக?
என்றும் வேலை செய்வதற்கு!
ஏனோ நாக்கை வாயைமட்டும்
இரண்டாய் இறைவன் வைக்காமல்
ஏனோ ஒன்றாய்த் தந்தானோ?
இதன்பொருள் என்ன அறிவாயா?
இரண்டு விதமாய்ப் பேசாமல்
என்றும் உண்மை பேசிடத்தான்
இரண்டாய் அவற்றைப் படைக்காமல்
இறைவன் ஒன்றாய்த் தந்துள்ளான்!
இரண்டு கண்கள் பார்த்தாலும்
இரண்டும் பார்ப்பது ஒன்றைத்தான்
இரண்டு பேச்சுப் பேசாதே
என்றும் உண்மை ஒன்றேதான்!
நானும் சிறுவன் தான்..
ReplyDeleteமிக நல்ல கருத்து இனிய பொங்கல் வாழ்த்தகள் சகோதரா.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
ReplyDeleteநன்றி
யாழ் மஞ்சு