Wednesday, August 10, 2011

பட்டாம் பூச்சி


பட்டாம் பூச்சி சிறகு
பார்க்கப் பார்க்க அழகு!
தொட்டால் ஒட்டிக் கொள்ளும்
தொடக்கூ டாத அழகு!

அழகாய் இருக்கும் சிறகு
அதனைப் பார்த்து விரும்பி
அழகுச் சிறகைப் பிடிக்க
அப்பிக் கொள்ளும் விரலில்!

பட்டாம் பூச்சி சிறகு
பறந்தால் மட்டும் அழகு!
தொடுப்பிடிக்க நினைத்தால்
தூள்தூ ளாகும் விலகு!

பறக்கும் அழகைப் பாரு!
பட்டாம் பூச்சி ஜோரு!
சிறகைப் பிடித்தி டாமல்
சிறகின் அழகைப் பாரு!

0 comments

Post a Comment