Wednesday, August 10, 2011

மாமா வீட்டுத் தோட்டத்திலே

மாமா வீட்டுத் தோட்டத்திலே
மாம்பழம் காய்த்துக் குலுங்கிடுதாம்!
மாமரக் கிளைக்கு அணிலேவா!
மாம்பழம் பறித்துத் தரவேவா!

நாவில் எச்சில் ஊறிடுதாம்
நல்ல மாம்பழம் தின்றிடவே!
தாவி ஏறவும் தெரியாது
தனியாய் ஏறவும் பயந்தானே!

அணிலே உனக்கும் மாம்பலத்தில்
ஆசை என்றால் கடித்திடுவாய்!
அணிலே பாதியைத் தின்றிடுவாய்!
அன்பாய் மீதியைத் தந்திடுவாய்!

மாமா வீட்டுத் தோட்டத்திலே
மாம்பழம் காய்த்துக் குலுங்கிடுதாம்!
மாமரக் கிளைக்கு அணிலேவா!
மாம்பழம் பறித்துத் தரவேவா!

0 comments

Post a Comment