தீபத்தின் ஒளிமிகும் தீபாவளி!
தித்திக்கும் சுவைதரும் தீபாவளி!
கோபத்தின் சிதறலாய் வாணவெடி!
கூடத்தில் தூள்படும் தீபாவளி!
தீமையைக் கண்டிடில் ராக்கெட்டில்
தீயிட வெடிபதைப் போல்வெடிப்பாய்!
ஆமையைப் போலநீ வீட்டினுள்ளே
அடங்கி விடாதே தீமைவந்தால்!
பூவாய்ச் சிதறிடும் மத்தாப்பாய்
புன்னகை வேண்டும் எப்போதும்!
தீவாய்ப் பட்ட சக்கரம்போல்
தினமும் சுழன்று உழைத்திடுவாய்!
வெடிக்கா திருக்கும் புஸ்வாணம்
வீண்அதை வெடித்ததும் வீண்எண்பாய்!
துடிப்பாய் எதையும் செய்யாமல்
தூங்கிக் கிடப்பவன் புஸ்வாணம்!
வெடிப்பதில் காசு கரியென்பார்
வெண்டா எனபது சரியில்லை!
வெடிகளைச் சுடுவதில் மகிழ்ச்சிவரும்!
வேதனை தீய்ந்து பொசுங்கிவிடும்!
சாட்டை என்பது ஒளிக்கோடாய்த்
தானே எரிந்து ஒளியாகும்!
சாட்டை மகிழ்ச்சி தருவதைப்போல்
தருவாய் உதவி பிறர்மகிழ!
0 comments
Post a Comment