Wednesday, August 10, 2011

கோலி குண்டு ஆடலாம்!

கோலி குண்டு ஆடலாம்!

குழியை நோக்கிக் கவனமாய்க்
குறியை வைத்து விரல்களால்
குழிக்குள் காயைப் போட்டிடும்
கோலிக் குண்டு ஆடலாம்!

கோலிக் குண்டு ஆடியே
குறியை வைத்துப் பழகினால்
நாளைக் கொருநாள் சுடுவதில்
நல்ல திறமை காட்டலாம்!

எதையும் எண்ணி எண்ணியே
எண்ணம் விலகி டாமலே
அதையே நாடிச் செய்திடும்
ஆர்வத் தாலே வெற்றிதான்!

கோலிக் குண்டு ஆடிடும்
குறும்புக் காரச் சிறுவனே
வேலி இல்லா வானிலே
விரையும் ராக்கெட் ஓட்டுவான்!

0 comments

Post a Comment