Wednesday, August 10, 2011

சைக்கிள் ஓட்டுவாய்!


சைக்கிள் ஓட்டப் பழகித் தருவேன்
தம்பி ஓடிவா!
பக்கம் பார்த்துச் சைக்கிள் ஓட்டப்
பழகிக் கொள்ளுவாய்!

இடுப்பை வளைத்துக் கோணி டாமல்
என்றும் ஓட்டுவாய்
எடுப்பாய் நிமிர்ந்து நேராய்ப் பார்த்துத்
துடிப்பாய் ஓட்டுவாய்!

சைக்களில் ஓட்டத் தெரிந்து கொண்டால்
சீக்கி ரத்திலே
திக்கெல் லாமும் சென்று திரும்பும்
திறமை காணலாம்.!

காட்டுத் தனமாய் வேக மாக்க்
கண்ணை மூடியே
ஓட்டிச் சென்றால் அந்த வேகம்
உன்னைச் சாய்க்குமே!

வேக மாகச் செல்வ தாலே
விபத்து நேரலாம்!
தேகம் சிராய்க்க நடக்கும் மனிதர்
தெருவில் சாயலாம்!

ஒழுங்கில்லாமல் செய்வதெதுவும்
உயர்வ தில்லையே!
ஒழுங்கு வேண்டும் என்றும் எதிலும்
உணர்ந்து கொள்ளடா!

0 comments

Post a Comment