Wednesday, August 10, 2011

ஆற்றல் காட்டுவீர்!


குக்குக் கூவெனக் குயில்கள் பாடிடும்
கொஞ்சும் இசையைக் கேள்!
அக்கக் காவெனக் கிளிகள் பேசிடும்
அன்புப் பேச்சைக் கேள்!

கொக்கரக் கோவெனக் கோழிகள் உண்னைக்
கூவி எழுப்பும் பார்!
அக்கறை யோடவை தத்தம் வழியில்
ஆற்றும் செயலைப் பார்!

சின்ன எறும்புகள் பெரிய பூச்சியைச்
சேர்ந்தே இழுப்பதைப் பார்!
என்றும் ஒற்றுமை வெற்றியைத் தந்திடும்
எறும்புகள் சொல்வதைக் கேள்!

சிறுவர் நீங்கள் படிக்கும் போதினில்
சிதறாக் கவனமுடன்
அறிவைப் பெற்றிடும் வழியில் முயன்றே
ஆற்றல் காட்டிடுவீர்!
We Can Do It ..!

0 comments

Post a Comment