Wednesday, August 10, 2011

விடியற்காலை


விடியற் காலைநேரம்
விதவித மான காட்சி!
அடியே பாப்பா நீயும்
அதிகா லையிலே விழிப்பாய்!

அடியில் வானம் சிவக்கும்
அழகாய் நெருப்புப் பந்தும்
அடியில் தோன்றி உருளும்
அப்புறம் மேலே எழும்பும்!

சின்னஞ் சிறிய மொட்டு
செவ்விதழ் விரிக்கப் பட்டு
வண்ணப் பூவாய் மாறும்
மலர்போல் சிரித்துப் பாரு!

சொட்டுப் பனியும் பூவில்
சொகுசாய் ஏறி அமரும்!
பட்டுத் தெறிக்கும் வெயிலால்
பனியும் பூவை விலகும்!

1 comments:

  1. The best real money casino sites in the US - Drmcd
    Best Online 논산 출장안마 Casino FAQs, 동두천 출장안마 Bonuses & Free Spins ✓ Try Newest Online 제천 출장안마 Casino 세종특별자치 출장샵 Games on Real Money NJ. Get Your Bonuses. 부산광역 출장마사지

    ReplyDelete