மீசைக்காரப் பூனை - என்மேல்
ஆசை யுள்ள பூனை!
பாசி மாலை கட்டிக் கொண்ட
பாச முள்ள பூனை!
சாம்பல் நிறத்துப் பூனை - கருப்புச்
சாந்து நிறத்தில் பூனை!
தேம்பித் தேம்பி அழும்பாப் - பாவைச்
சிரிக்கச் செய்யும் பூனை!
கொலுவில் வைத்த பொம்மை யாக்க்
குந்தி டாத பூனை!
வலிமை யாகப் பாய்ந்தே எலியை
வளைத்துப் போகும் பூனை!
உறியில் உள்ள பாலைக் குடிக்க
உயரத் தாவும் பூனை!
உறியும் கவிழப் பாலும் கொட்ட
உறிஞ்சுக் குடிக்கும் பூனை!
மியாவ் மியாவ் பூனை!
மீசைக் காரப் பூனை!
பயமு றுத்தும் பூனை!
பால்நி றத்துப் பூனை!
பூனை பழகிக் கொண்டால்
புதிய நல்ல தோழன்!
பூனை வளர்க்கும் போது
போகும் எலியின் தொல்லை!
0 comments
Post a Comment