சிறுவ னாக வடிவம் கொண்ட
தெய்வ ஞான முருகன்!
சிறுவ ருக்குத் துணையி ருக்கும்
தெய்வம் பால முருகன்!
சுட்ட பழமோ சுட்டி டாத
தூய பழமோ எதுவோ
கிட்ட வேண்டும் என்று கேட்டுக்
கேலி செய்த முருகன்!
சுட்டி டாத பழத்தைப் போட்டும்
ஊதித் தின்ற போது
சுடுகி றதோ.. பழமும் என்று
சொல்லிச் சிரித்த முருகன்!
அறிவு மிக்க அவ்வை தன்னை
அயர வைத்த முருகன்!
கருணை கொண்டு மயிலின் மீது
காட்சி தந்த முருகன்!
0 comments
Post a Comment