Wednesday, August 10, 2011

கணபதியாம் கணபதி!

தொப்பைப் பெருத்த கணபதியாம்!
தும்பிக் கையுடை கணபதியாம்!
எப்பொழு தும்யார் எந்நாளும்
எண்ணிப் பார்த்திடும் கணபதியாம்!

ஒருகாய் தேங்காய் சிதறிவர,
ஒவ்வொரு பேரும் வணங்கிவர,
அருளும் அன்புக் கணபதியாம்
அசையா திருக்கும் கணபதியாம்!

சிவனே என்று இருக்கின்ற
தெய்வம் அந்தக் கணபதியாம்!
சிவனே என்று நீயிருந்தால்
தேடும் கணபதி அருள்வருமோ?

உழைக்கும் பேரை உயத்திடத்தான்
உட்கார்ந் திருக்கும் கணபதியாம்!
உழைத்துப் படித்தால் நீஉயர
உனக்கும் அருள்தரும் கணபதியாம்!!

0 comments

Post a Comment