சின்ன சின்ன மீன்கள் ஒன்றாய்ச்
சேர்ந்து வாழும் தொட்டியாம்!
வண்ண வண்ண மீன்கள் அன்பாய்
வாழு கின்ற தொட்டியாம்!
அண்ணன் தம்பி சண்டை யில்லை
அனுச ரித்து வாழுமாம்!
சின்ன மீனைப் பெரிய மீன்கள்
சிறிதும் ஏய்ப்ப தில்லையாம்!
பருக்கை கொஞ்சம் போடும் போது
பங்கு போட்டுத் தின்னுமாம்!
நெருக்க மான உறவு கொண்டு
நேர்த்தி யாக கூடுமாம்!
கண்மாய், குளத்தைப் பார்க்கும் போது
கடுகு போலத் தொட்டியாம்!
வண்ண மீண்கள் அதிலும் கூட
வம்பில் லாமல் வாழுமாம்!
0 comments
Post a Comment