Wednesday, May 25, 2011

திருக்குறள்

திருக்குறள் திருக்குறள் திருக்குறளாம்
தெய்வப் புலவர் வள்ளுவரின்
திருக்குறள் திருக்குறள் திருக்குறளாம்
திருக்குறள் படித்தால் உருப்படலாம்!

உண்மை பேசும் அவசியத்தை
உணர்த்திக் காட்டும் திருக்குறளாம்!
எண்ணப் படியே செயலாற்றும்
இயல்பைத் தருவது திருக்குறளாம்!

தினமும் ஒருகுறள் படிப்பதனால்
தெரியும் நன்மை தீமையெல்லாம்!
மனதல் பிறரைத் தம்மைப்போல்
மதிக்கச் சொல்லும் திருக்குறளாம்!

யார்க்கும் நன்மை செய்வதெனும்
அன்பை வளர்க்கும் திருக்குறளாம்!
வேர்க்க உழைக்கும் மனிதர்களே 
வெல்வார் என்னும் திருக்குறளாம்!

0 comments

Post a Comment