Tuesday, May 24, 2011

பட்டாம்பூச்சி

பட்டாம் பூச்சிச் சிறகு
பார்க்கப் பார்க்க அழகு!
தொட்டால் ஒட்டிக் கொள்ளும்
தொடக்கூ டாத அழகு!

அழகாய் இருக்கும் சிறகு 
அதனைப் பார்த்து விரும்பி
அழகுச் சிறகைப் பிடிக்க 
அப்பிக் கொள்ளும் விரலில்!

பட்டாம் பூச்சிச் சிறகு
பறந்தால் மட்டும் அழகு!
தொட்டுப் பிடிக்க நினைத்தால்
தூள்தூ ளாகும் விலகு!

பறக்கும் அழகைப் பாரு!
பட்டாம் பூச்சி ஜோரு!
சிறகைப் பிடித்தி டாமல்
சிறகி அழகைப் பாரு!

1 comments:

  1. Very Nice!! Please share this type of interesting content. Maths tuition in chennai treat the kids with the behaviour disorder and make the cure.

    ReplyDelete