Tuesday, May 24, 2011

குண்டுப் பூனை

பட்டு மேனிப் பூனையைப் 
பார்க்க உனக்கு ஆசையா?
சட்டி நிறையப் பாலினைக் 
கொட்டி வைத்துக் காத்திரு!

குட்டிப் பூனை பார்க்கலாம்
குண்டுப் பூனைப் பார்க்கலாம்
கட்டிப் பிடிக்க ஓடினால்
எட்டி ஓடும் பார்க்கலாம்!

எட்டிச் சென்ற நின்றுகொள்
இருட்டைப் பார்த்து ஒளிந்துகொள்
சட்டிப் பாலைப் பூனையும்
தானே முழுதும் குடிக்குமே!

0 comments

Post a Comment