Tuesday, May 24, 2011

வெள்ளாடு

மேய்ச்சல் நிலத்தில் வெள்ளாடு
மேமே என்றிடும் வெள்ளாடு
காயும் வெயிலில் கிடக்காமல்
கருப்பாய் மாறிய வெள்ளாடு!

இலைதழை தின்னும் வெள்ளாடு
இனிய பால்தரும் வெள்ளாடு
அலைஅலை யாகமுடியோடு 
அணைப்பதற் கேற்ற வெள்ளாடு!

0 comments

Post a Comment