Wednesday, May 25, 2011

சுறு சுறுப்பாய்த் தேனீ

பூவின் மீது அமரும்
புதிய தேனைச் சேர்க்கும்!
நாவில் இனிக்கும தேனை
நாளும் சேர்க்கும் தேனீ!

சுறு சுறுப்பாய்த் தேனீ
சுற்றிச் சுற்றித் திரியும்1
விறு விறுப்பாய்த் தேனை 
வேண்டு மட்டும் சேர்க்கும்!

சோம்ப லில்லாத் தேனீ
சோர்வில் லாத தேனீ!
நாம் குடிக்கத் தேனை 
நன்றாய்ச் சேர்க்கும் தேனீ!

0 comments

Post a Comment