Tuesday, May 24, 2011

மேமே சொல்லு!

மேமே சொல்லு வெள்ளாடே!
மேய்திடப் புல்லை நான்தருவேன்!
மா மா சொல்லு பசுமாடே
வைக்கோல் நிறைய நான்தருவேன்!

கூகூ சொல்லு பூங்குயிலே
கொறித்துத் தின்ன நெல்தருவேன்!
கா கா சொல்லு கருங்காக்காய்
கவளச் சோறு நான்தருவேன்!

0 comments

Post a Comment